சினிமா

பணத்தகராறில் அடிதடி: நடிகர் சந்தானம் மீது வழக்கப்பதிவு

பணத்தகராறில் ஏற்பட்ட மோதலில் கட்டிட காண்டிராக்டர் மற்றும் நடிகர் சந்தானத்துக்கு காயம் ஏற்பட்டது. இதுதொடர்பாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டு வழக்குப்பதிவு உள்ளது.

மாலை மலர்

இதற்காக சந்தானம் தனது பங்களிப்பாக ஒரு பெரிய தொகையை சண்முகசுந்தரத்திடம் கொடுத்தார். பின்பு சில காரணங்களால் கட்டிடம் கட்டும் முடிவை இருவரும் நிறுத்திவிட்டனர். இதையடுத்து சந்தானம் தான் கொடுத்த பணத்தை சண்முகசுந்தரத்திடம் அடிக்கடி கேட்டு வந்துள்ளார்.

இதில் குறிப்பிட்ட தொகையை சண்முகசுந்தரம், சந்தானத்திடம் கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. மீதம் தர வேண்டிய தொகையை தருமாறு சந்தானம் கேட்டு வந்தார். ஆனால் சண்முகசுந்தரம் மீதி தொகையை கொடுக்காமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று சந்தானம் தனது மேலாளர் ரமேஷ் உடன் வளசரவாக்கத்தில் உள்ள சண்முகசுந்தரம் அலுவலகத்திற்கு சென்றார். அங்கு சண்முகசுந்தரம் மற்றும் அவரது நண்பரும், பா.ஜனதா பிரமுகருமான பிரேம் ஆனந்த் ஆகியோர் இருந்துள்ளனர்.

சந்தானம் தனக்கு தரவேண்டிய தொகையை கேட்டபோது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் சண்முகசுந்தரம் மற்றும் பிரேம்ஆனந்த் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. நடிகர் சந்தானத்துக்கும் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற வளசரவாக்கம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது சண்முகசுந்தரம், நடிகர் சந்தானம் தன்னை தாக்கி விட்டதாக கூறி போலீசில் புகார் அளித்தார்.

இதனை தொடர்ந்து காயம் அடைந்த நடிகர் சந்தானம் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக சென்றார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதேபோல் பிரேம் ஆனந்தும் அதே ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றார்.

இந்த நிலையில் பா.ஜனதா கட்சியினரை சேர்ந்த சிலர் அந்த ஆஸ்பத்திரி முன் முற்றுகையிட்டு உள்ளே செல்ல முயன்றனர். இதுபற்றி தெரியவந்ததும் நடிகர் சந்தானம் தனது காரை அங்கேயே நிறுத்திவிட்டு மற்றொரு காரில் ஏறி வீட்டுக்கு சென்று விட்டார். தொடர்ந்து சந்தானத்திடம் விசாரிக்க சென்ற போலீசார் சந்தானம் இல்லாததால், அவரது காரை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.