சினிமா

கங்கனா ரணாவத்துக்குள் புரூஸ்லீ ஆவி - ராம் கோபால் வர்மா

மணிகர்னிகா படத்தை பார்த்து கங்கனா ரணாவத்தை பாராட்டிய ராம் கோபால் வர்மா, இந்த திரைப்படத்தில் கங்கனா ரணாவத் நடிப்பு மூலம் புரூஸ்லீயின் ஆவியை உணர்ந்ததாக கூறினார். #Manikarnika #KanganaRanaut

மாலை மலர்

பெண்களை மையமாக கொண்ட திரைப்பட வரிசையில் முதன்முறையாக ‘மணிகர்ணிகா: தி குயின் ஆப் ஜான்சி’ திரைப்படம் திரையிட்ட வார இறுதியில் ரூ.40 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. கங்கனா ரணாவத்தை பாலிவுட்டின் ராணி என்று அழைக்கிறார்கள்.

அதற்கான காரணம் இப்போது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் படத்தில் கங்கனா மிக அற்புதமாக நடித்துள்ளதாகவும் பேசப்பட்டு வருகிறது. இயக்குநர் ராம்கோபால் வர்மா, கங்கனா ரணாவத்தின் ஸ்டண்ட் நடிப்பை வியந்து பேசி உள்ளார்.

“நேர்மையாக யோதித்து பார்த்தால் இத்திரைப்படத்தில் கங்கனா ரணாவத் நடிப்பு மூலம் புரூஸ்லீயின் ஆவியை நான் உணர்ந்தேன் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் அவரது தீவிர முகத்தோற்றமே, பறந்தடிக்கும் ஸ்டண்ட் கூட நம்பக்கூடிய தோற்றத்தைத் தந்தது.’’ இவ்வாறு ராம்கோபால் வர்மா தெரிவித்துள்ளார். #Manikarnika #KanganaRanaut #RamGopalVarma