சஞ்ஜய் - விஜய் 
சினிமா

விஜய் மகன் படத்தை தயாரிப்பது குறித்து பிரிட்டோ விளக்கம்

விஜய் மகன் சஞ்சய் அறிமுகமாகும் படத்தை பிரிட்டோ தயாரிக்க இருப்பதாக வந்த செய்திக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.

 விஜய் மகன் சஞ்சய்க்கு இயக்குனராக தான் அதிக ஆர்வம் உள்ளது. அவருக்கு ஹீரோவாக நடிக்கும் ஆர்வம் இருக்கிறதா இல்லையா என்பது கூட எனக்கு தெரியாது. தற்போது அவர் கனடாவில் படித்து வருகிறார். படித்து முடித்த பிறகு அவர் எந்த துறையை தேர்ந்தெடுக்கிறார் என்பதை அதன் பின் தான் முடிவு செய்ய முடியும்.

சஞ்சய் படத்தை நான் தயாரிக்கவிருப்பதாக் வெளிவந்த செய்தி முற்றிலும் வதந்தி. இதுகுறித்து நான் விஜய்யிடம் பேசினதே இல்லை’ என்று கூறினார்.