சினிமா

அருள்நிதி ஜோடியாகும் பிந்து மாதவி

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகை பிந்து மாதவி அடுத்ததாக அருள்நிதி நடிப்பில் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

மாலை மலர்

அருள்நிதி அடுத்ததாக ‘புகழேந்தி எனும் நான்’ என்ற அரசியல் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் அருள்நிதி, தீவிர அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். தற்போதுள்ள அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப ‘புகழேந்தி எனும் நான்’ படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை கரு.பழனியப்பன் இயக்குகிறார். நாயகிக்கும் முக்கியத்துவம் அளிக்கும் இந்த கதையில் பிந்து மாதவி நாயகியாக நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிந்து மாதவி கூறும்போது,

"எனக்கு பல பட வாய்ப்புகள் வந்தாலும், நான் சிறந்த கதைகளையே தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்கிறேன். நல்ல கதை மட்டுமல்லாமல், நடிக்க வாய்ப்புள்ள நல்ல கதாபாத்திரமாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அப்படி சமீபத்தில் எனக்கு அமைந்த படம் தான் 'புகழேந்தி எனும் நான்'.