பிக்பாஸ் பிரபலங்கள் 
சினிமா

விஜய் சேதுபதி படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்

பிக்பாஸ் பிரபலம் ஒருவர் அடுத்ததாக விஜய் சேதுபதி, சிபிராஜ் போன்ற நடிகர்களின் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

மாலை மலர்

மெட்ராஸ், கபாலி, ஒருநாள் கூத்து படங்களில் நடித்தவர் ரித்விகா. பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த சீசனில் பங்கேற்று வெற்றி பெற்றார். இவர் தற்போது அட்டகத்தி தினேஷூடன் நடித்துள்ள 'இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’ என்ற திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தினை பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அதியன் ஆதிரை இயக்கி இருக்கிறார்.

சமீபத்தில் நடைபெற்ற விருது விழாவில் கலந்துகொண்ட ரித்விகா, தனது அடுத்தடுத்த திரைப்பட வெளியீடுகள் குறித்து பேசினார். அவர் பேசியதாவது: அடுத்ததாக நடிகர் விஜய் சேதுபதி உடன் ஒரு திரைப்படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறேன். இதன் பின்னர் நடிகர் சிபிராஜ் உடனும் ஒரு படத்தில் நடிக்க உள்ளேன். இதைத்தொடர்ந்து நடிகை அமலாபால் உடன் பெண்கள் நலன் சார்ந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளேன்” என கூறினார்.