சினிமா

ஒரு வழியாக பொட்டு ரிலீசுக்கு தேதி குறித்த படக்குழு

வடிவுடையான் இயக்கத்தில் பரத் நடிப்பில் மருத்துவ பின்னணியில் உருவாகி இருக்கும் `பொட்டு' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #Pottu #Bharath

மாலை மலர்

ஷாலோம் ஸ்டுடியோஸ் சார்பில் ஜான் மேக்ஸ், ஜோன்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் `பொட்டு'.

வடிவுடையான் இயக்கியிருக்கும் இந்த படத்தில் பரத் நாயகனாக நடித்துள்ளார். நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே நடிக்கிறார்கள். தம்பி ராமய்யா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ் ராம், ஷாயாஜி ஷிண்டே, மன்சூர் அலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவா லட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

மருத்துவ பின்னணியில் ஹாரர் கதையில் உருவாகி இருக்கும் இந்த படம் வருகிற 25-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு படம் தள்ளிப்போன நிலையில் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

இனியன் ஹரீஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு அம்ரீஷ் இசையமைத்திருக்கிறார். #Pottu #Bharath