சினிமா

விஜய் சேதுபதியுடன் நடிக்கும் பாரதிராஜா

பாலாஜி தரணிதரன் விஜய் சேதுபதியின் 25-வது படமாக உருவாகும் ‘சீதக்காதி’ படத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். #Seethakathi #VijaySethupathi

மாலை மலர்

விஜய் சேதுபதியின் 25-வது படமாக ‘சீதக்காதி’ உருவாகி வருகிறது. `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் இயக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி 80 வயதான நாடக கலைஞனாக நடிக்கிறார். 

கலைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்த படத்தில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குநர் பாரதிராஜா ஒப்பந்தமாகி இருக்கிறார். ஏற்கனவே இயக்குநர் மகேந்திரன் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பேஷன் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ரம்யா நம்பீசன், காயத்ரி, அர்ச்சனா, பார்வதி நாயர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சமீபத்தில் ‘சீதக்காதி’ படத்தில் இருந்து `மேக்கிங் ஆஃப் ஐயா' என்ற வீடியோவை படக்குழு வெளியிட்டது. அந்த வீடியோவுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

விஜய் சேதுபதி - பாலாஜி தரணிதரன் மீண்டும் இணைந்திருப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. #Seethakathi #VijaySethupathi