சினிமா

`பாகுபலி' கூட்டணி உடைந்தது

பிரபாஸ் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் மூலம் இணையவிருந்த `பாகுபலி' கூட்டணி நடிகை அனுஷ்காவால் உடைந்துவிட்டதாக டோலிவுட்டில் பேசப்படுகிறது.

மாலை மலர்

பாகுபலி படத்தில் பிரபாஸ் - அனுஷ்காவுக்கு இடையேயான நெருக்கம் நல்ல வரவேற்பை பெற்றதுடன், இருவருக்கும் இடையே காதல் இருப்பதாகவும் கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில், பிரபாஸின் `சாஹு' படத்திலும் அனுஷ்காவையே நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்தது.

இதையடுத்து அனுஷ்காவுடன் பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டு வந்தது. மேலும் அனுஷ்கா இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகிவிட்டதாகவும் செய்திகள் வந்த வண்ணம் இருந்தது.

இந்நிலையில், சாஹோ படத்தில் அனுஷ்கா நடிக்கவில்லை என்ற புதிய தகவல் ஒன்று தற்போது கிடைத்துள்ளது. தமிழில் பெரிய படம் ஒன்றில் நடிக்க அனுஷ்கா ஒப்பந்தமாகி இருக்கிறாராம். எனவே `சாஹு' படத்தில் நடிக்க தேதி ஒதுக்க முடியாத சூழல் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பாகுபலி கூட்டணி உடைந்துவிட்டதாக டோலிவுட்டில் ஒரு பேச்சு அடிபடுகிறது. வேறொரு படத்தில் இருவரும் ஜோடி சேராமலா இருந்துவிடுவார்கள் என்ற கேள்விகளும் வந்தவண்ணம் உள்ளன.

அனுஷ்காவின் தேதி கிடைக்காததால், `துவ்வடு ஜெகன்நாதம்' படத்தில் அல்லு அர்ஜுனுடன் ஜோடியாக நடித்திருந்த பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.