வசூலில் இந்திய சினிமாவை பாலிவுட் படங்கள் ஆட்சி செய்து வந்த நிலையில், தென்னிந்திய திரைப்படம் ஒன்று உலகலவில் வசூல் சாதனை படைத்து, பேசப்படும் படமாக உருவெடுத்திருப்பதற்கு காரணமானவர் ராஜமவுலி என்று சொன்னால் அது மிகையாகாது.
இந்நிலையில், `பாகுபலி-2' -வின் வசூலுக்கு போட்டியாக அமீர்கானின் `தங்கல்' படம் 2 வாரங்களுக்கு முன்பு சீன மொழியில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. சீன மக்களால் விரும்பி பார்க்கப்பட்ட `தங்கல்' சீனாவில் மட்டும் ரூ. 700 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்திருக்கிறது. இதற்கு முன்பு சீனாவில் வெளியான அனைத்து இந்திய படங்களின் வசூல் சாதனையையும் `தங்கல்'முறியடித்துள்ளது.
`பாகுபலி-2' படத்தை தொடர்ந்து வசூலில் படமும் வசூலில் வரலாற்றை திருப்பி எழுதி வருகிறது. உலகம் முழுவதும் சாதனை படைத்து வரும் `தங்கல்' வசூலில் ரூ.1500 கோடிக்கு நெருக்கத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. எனவே `பாகுபலி-2' -ன் வசூலை இன்னும் சிலநாளில் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் `தங்கல்' படத்தின் வசூல் சாதனைக்கு ஈடுகொடுக்கும் விதமாக `பாகுபலி-2' படத்தை சீனாவில் திரையிட முடிவு செய்துள்ள படக்குழு, அதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதன்படி படத்தை வருகிற ஜுலை மாதம் சீனாவில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.