சினிமா

இந்தியாவில் அதிகம் வசூலித்த ஹாலிவுட் படம் - அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் புதிய சாதனை

இந்திய பாக்ஸ் ஆபீஸில் அதிகம் வசூலித்த ஹாலிவுட் படங்களின் பட்டியலில் `அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்' படம் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. #AvengersInfinityWar

மாலை மலர்

உலகளவில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த ‘அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார்’ படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி திரையரங்குளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 

உலக அளவில் பெரிய வசூல் சாதனை நிகழ்த்தி உள்ள இந்த படம், கடந்த 11 நாட்களில் ரூ.7 ஆயிரம் கோடியை வசூலித்து சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தியாவில் முதல் 5 நாட்களில் ரூ.150 கோடியை மொத்தமாக வசூலித்த அவெஞ்சர்ஸ், தற்போது வரை ரூ. 246.51 கோடியை வசூல் செய்து இந்திய பாக்ஸ் ஆபீஸில் அதிகம் வசூல் செய்த ஹாலிவுட் படம் என்ற சாதனையை படைத்துள்ளது.

இதற்கு முன்னதாக மார்வெல் தயாரித்த `தி ஜங்கிள் புக்' படம் இந்த சாதனையை தன்வசம் வைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

மார்வெல் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் ரஸோ சகோதரர்கள் இயக்கியிருக்கும் இந்த படத்தில் பல சூப்பர் ஹீரோக்களும், தனோஸ் என்ற பயங்கரமான வில்லனும் நடித்துள்ளனர். மிரட்டலான அதிரடி சாகசங்கள் நிரம்பிய படமாக இந்த படம் வந்துள்ளது.

இதில் ராபர்ட் டவுனி, கிறிஸ் கெம்ஸ்வொர்த், பார்க் ரூபலா, கிறிஸ் வெனஸ், ஸ்கேர்லட் ஜான்சன், டாம் ஹாலன்ட், எலிசபெத் ஆல்சன் உள்பட பலர் நடித்துள்ளனர். #AvengersInfinityWar #AvengersInfinity #ThanosDemandsYourSilence