சினிமா

`பண்டிகை'யை கொண்டாடும் ஆரா சினிமாஸ்

ஃபெரோஸ் இயக்கத்தில் கிருஷ்ணா - ஆனந்தி நடிப்பில் வெளியாகியுள்ள `பண்டிகை' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் ஆரா சினிமாஸ் `பண்டிகை' படத்தை நிஜ பண்டிகையாகவே கொண்டாடி வருகிறது.

குறிப்பாக இளைஞர்கள் விரும்பி பார்க்கும் படமாக பண்டிகை உருவெடுத்துள்ளது. ஃபெரோஸ் இயக்கியிருக்கும் இப்படத்தில் கிருஷ்ணா - ஆனந்தி - சரவணன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை டீ டைம் டாக்ஸ் என்கிற நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் ஃபெரோஸின் மனைவியும், நடிகையுமான விஜயலட்சுமி தயாரித்துள்ளார்.

`இருமுகன்', `தேவி', `சைத்தான்', ஆகிய வெற்றி படங்களுக்கு பிறகு ஆரா சினிமாஸ் சார்பில் மகேஷ் கோவிந்தராஜ் வெளியிட்டுள்ள இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் `பண்டிகை' படத்தை நிஜ பண்டிகையாகவே ஆரா சினிமாஸ் கொண்டாடி வருகிறது.  மேலும் தங்களது வெற்றி பயணத்தில் இன்னொரு மகுடமாக `பண்டிகை' படத்தையும் சேர்த்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ஆரா சினிமாஸ் சார்பில் மகேஷ் கோவிந்தராஜ் கூறும்போது,

" திரையுலகம் தற்போது மிகவும் சவாலான சோதனைகளை சந்தித்துக் வருகிறது. இந்த நேரத்தில் `பண்டிகை' படத்தின் வெற்றி ஒரு ஒளிக்கீற்றாக வந்து இருக்கிறது. இதுவரை கண்டிராத ஒரு கதைகளத்தில் மிக அருமையாக கதையை சொன்ன இயக்குனர் ஃபெரோஸ் தமிழ் திரை உலகின் மிக சிறந்த எதிர்கால இயக்குனர்களில் ஒருவராக திகழ்வார் என்பதில் ஐயமில்லை. அவருடைய கடின உழைப்பும், திறமையும் தான் இந்த வெற்றிக்கு அடித்தளம்.