ஜல்லிக்கட்டை மையமாக வைத்து கிராமத்து பின்னணியில் பொழுதுபோக்கு படமாக ‘கருப்பன்’ படத்தை உருவாக்கி வருகிறார்கள். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது இப்படத்தின் பாடல்களை விரைவில் வெளியிட இருப்பதாக இப்படத்தின் இசையமைப்பாளர் இமான் கூறியுள்ளார். மேலும் இப்படத்தின் இசை உரிமையை சோனி நிறுவனம் பெற்றுள்ளது.