சினிமா

சௌந்தரராஜாவுக்கு கைக்கொடுக்கும் அஸ்ரா கார்க்

போலீஸ் உயர் அதிகாரியான அஸ்ரா கார்க், தற்போது போலீஸ் அதிகாரியாக ‘அபிமன்யு’ படத்தில் நடித்து வரும் சௌந்தரராஜாவுக்கு உதவி செய்திருக்கிறார்.

மாலை மலர்

மேலும் இவரது நடிப்பில் ‘திருட்டுபயலே 2’, ‘கள்ளன்’, ‘பில்லா பாண்டி’ உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது. தற்போது ‘அபிமன்யு’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இப்படத்தில் உதவி கமிஷனராக நடிக்கிறார். இப்படத்திற்காக போலீஸ் அதிகாரிகளின் உடை, பாவனை, உடல் மொழி உள்ளிட்ட அனைத்து சம்சங்களை தெரிந்து நடிக்க முயற்சித்து வருகிறார். இதற்கான பயிற்சியும் எடுத்து வருகிறார் சௌந்தரராஜா.

இப்படம் வழக்கமான போலீஸ் படங்கள் போல் இல்லாமல், முற்றிலும் வித்தியாசமாக உருவாக்க திட்டமிட்டுள்ளனர். கமர்ஷியல் படங்களுக்கு உண்டான, சண்டைக் காட்சிகளை படமாக்காமல் யதார்த்தமாக எடுக்க இருக்கிறார்கள். இளம் உதவி கமிஷனர் பதவியில் சேர்ந்தவுடன், அவருக்கு ஏற்படும் நெருக்கடி, இன்னல்கள், அதை அவர் எப்படி கையாள்கிறார் என்பதை படமாக்க இருக்கிறார்கள்.