சினிமா

ஆர்யாவின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

`டிக் டிக் டிக்' படத்தை தொடர்ந்து சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் புதிய படத்திற்கு `டெடி' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. #Teddy #Arya #ShakthiSoundarRajan

மாலை மலர்

ஆர்யாவின் முந்தைய படங்களுக்கு போதிய வரவேற்பு கிடைக்காத நிலையில், கடைசியாக வெளியான `கஜினிகாந்த்' மட்டும் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், `மிருதன்', `டிக் டிக் டிக்' என அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்த சக்தி சவுந்தர் ராஜன் இயக்கும் புதிய படத்தில் ஆர்யா ஒப்பந்தமாகி இருக்கிறார்.

ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியான நிலையில், படத்திற்கு டெடி என்று தலைப்பு வைத்துள்ளனர்.

ஆர்யா தற்போது சூர்யாவுடன் இணைந்து `காப்பான்' படத்தில் நடித்துள்ளார். இதுதவிர கன்னடத்தில் வரவேற்பை பெற்ற `மஃப்டி' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதற்கிடையே ஆர்யா - சாயிஷாவுக்கு ஐதராபாத்தில் வைத்து இன்று திருமணம் நடந்தது. #Teddy #Arya #ShakthiSoundarRajan