சினிமா

மகாமுனி படப்பிடிப்பை முடித்த ஆர்யா

சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா - மஹிமா நம்பியார், இந்துஜா நடிப்பில் உருவாகி வந்த ‘மகாமுனி’ படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டது. #MagaMuni #Arya #MahimaNambiar #Indhuja

மாலை மலர்

`கஜினிகாந்த்' படத்திற்கு பிறகு ஆர்யா நடிப்பில் அடுத்ததாக படங்கள் வெளிவரவில்லை. கடந்த மார்ச் மாதம் சாயிஷாவை திருமணம் செய்து கொண்டார். கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா - மோகன்லால், சாயிஷாவுடன் இணைந்து `காப்பான்' படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

இதுதவிர சாந்தகுமார் இயக்கத்தில் ‘மகாமுனி’ மற்றும் சக்தி சவுந்தர்ராஜன் இயக்கத்தில் `டெடி' படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரு படங்களையும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனமே தயாரிக்கிறது.

இதில் ‘மகாமுனி’ படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டதாக ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மகாமுனி படத்தில் மஹிமா நம்பியார், இந்துஜா நாயகிகளாக நடித்துள்ளனர். ஜுனியர் பாலையா, ஜெயபிரகாஷ், அருள்தாஸ், ஜி.எம்.சுந்தர், காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மௌன குரு படத்திற்கு பிறகு சாந்தகுமார் இயக்கியிருக்கும் இந்த படம் க்ரைம் திரில்லர் பாணியில் உருவாகி இருக்கிறது. படத்தின் திரைக்கதை அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் பரபரப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது.

அருண் பத்மநாபன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார். பாடல்களை கவிஞர் முத்துலிங்கம் எழுதுகிறார். தேசிய விருதுப்பெற்ற வி.ஜே. சாபு ஜோசப் படத்தொகுப்பை கவனிக்கிறார். #MagaMuni #Arya #MahimaNambiar #Indhuja