சினிமா

திருவான்மியூரில் கோவில் திருவிழா: அரவிந்த்சாமி போலீசில் புகார்

திருவான்மியூரில் கோவில் திருவிழாவில் பட்டாசு வெடித்தது குறித்து நடிகர் அரவிந்த்சாமி கமி‌ஷனருக்கு ஆன்லைனில் புகார் மனு ஒன்றை அனுப்பியிருக்கிறார்.

பிரபல நடிகர் அரவிந்த் சாமி, திருவான்மியூரில் வசித்து வருகிறார். இவர் வசிக்கும் பகுதியில் கோவில் திருவிழாவின் போது பட்டாசுகள் வெடிக்கப்பட்டுள்ளன.

இரவு நேரத்தில் பட்டாசு வெடிக்கப்பட்டதால் அரவிந்த்சாமி தூங்காமல் தவித்தார். இதுபற்றி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து புகார் அளித்தார். திருவான்மியூர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் அரவிந்த் சாமி இந்த பிரச்சினை தொடர்பாக சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலமாக ஒரு புகார் அளித்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

நான் வசிக்கும் பகுதியில் இரவு நேரத்தில் கோவில் திருவிழா நடப்பதால் பட்டாசு வெடிக்கிறார்கள். இதனால் இரவு நேரங்களில் என்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை. இதனால் எனது குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அரவிந்த்சாமி தனது புகாரில் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT