சினிமா

அனைத்தையும் தோலுரித்துக் காட்டிய `அருவி': இயக்குநர் ஷங்கர் பாராட்டு

அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வரும் அருவி படத்திற்கு இயக்குநர் ஷங்கர் பாராட்டுக்களை தெரிவித்திருக்கிறார்.

டிரீம் வாரியார் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வரும் படம் ‘அருவி’. 

கே.எஸ்.ரவிகுமாரிடம் துணை இயக்குனராக பணியாற்றிய அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள அதீதி பாலனின் நடிப்புக்கும், திருநங்கை அஞ்சலி வரதனின் கதாபாத்திரத்துக்கும்  பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. அதேநேரத்தில் படத்தின் இயக்குநருக்கும் பல்வேறு இயக்குநர்களும், திரையுகைச் சேர்ந்த பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றன. 

இந்நிலையில், இயக்குநர் ஷங்கர் அவரது டுவிட்டல், அருவி மிகச் சிறந்த படம். அனைத்தையும், அனைவரையும் தோலுரித்துக் காட்டியது. இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன், நாயகி அதிதி பாலன் உள்ளிட்ட அனைவரது நடிப்புமே சிறப்பு. இவ்வாறு கூறியிருக்கிறார். 

அதேபோல், இயக்குநர் சுசீந்திரன், கார்த்திக் நரேன், நடிகர்கள் கார்த்தி, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலரும் அருவி படத்திற்கும், படக்குழுவுக்கும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.