சினிமா

விஜய் ஆண்டனி விரும்பும் கவிஞர் ஆனது மகிழ்ச்சி: அருண் பாரதி

கவிஞர் அருண்பாரதி, இசையமைப்பாளர், நடிகர் விஜய் ஆண்டனி விரும்பும் கவிஞர் ஆனது மிகவும் மகிழ்ச்சி என்று கூறியிருக்கிறார்.

மாலை மலர்

இவர் எழுதிய ‘புதிய பானையில் பழைய சோறு’ என்ற கவிதை தொகுப்பை கவிஞர் அப்துல்ரகுமான், இயக்குனர்கள் பாரதிராஜா, கே.பாக்யராஜ், லிங்குசாமி, பாண்டிராஜ், இசை அமைப்பாளர் நடிகர் விஜய் ஆண்டனி உள்பட பலர் பாராட்டி உள்ளனர்.

தற்போது விஜய் ஆண்டனி விரும்பும் கவிஞராகி இருக்கும் அருண்பாரதியிடம் அதுபற்றி கேட்டபோது...

“தற்போது விஜய் ஆண்டனி நடித்து இசை அமைக்கும் ‘அண்ணாதுரை’ படத்தில் அனைத்து பாடல்களையும் எழுதி இருக்கிறேன். அவர் நடிக்கும் ‘காளி’ படத்திலும் 2 பாடல்கள் எழுதி இருக்கிறேன். விஜய் ஆண்டனி விரும்பும் கவிஞரானது மிகவும் மகிழ்ச்சி.