சினிமா

பாலா - துருவ் விக்ரம் இணையும் படத்தின் தலைப்பு

பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகவிருக்கும் `அர்ஜுன் ரெட்டி' படத்தின் தமிழ் ரீமேக்கிற்கான தலைப்பு வெளியாகி இருக்கிறது.

பாலா இயக்கத்தில் உருவாகவிருக்கும் இந்த படத்திற்கு வர்மா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

நாயகி தேர்வு நடைபெற்று வரும் நிலையில், ஸ்ரேயா சர்மா நடிக்க அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை தமிழ் மற்றும் மலையாளத்தில் இ4 என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

விக்ரமின் `ஸ்கெட்ச்' படத்திற்கு ஒளிப்பதிவு செய்த சுகுமார் இப்படத்திற்கும் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜனவரியில் தொடங்க இருக்கிறது. இப்படத்தில் இடம்பெறும் மற்ற கலைஞர்கள் குறித்த விவரம் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT