சினிமா

அறம்

கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா கலெக்டராக கலக்கியிருக்கும் `அறம்' படத்தின் முன்னோட்டம்.

சமூகத்தின் முக்கிய பிரச்சனை பற்றி அலசி இருக்கும் இந்த படத்தில் நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

விக்னேஷ், ரமேஷ், சுனு லெட்சமி, வினோதினி வைத்தியநாதன், ராமச்சந்திரன் துரைராஜ், ஆனந்தகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் இந்த படத்தை கோபி நயினார் இயக்கியிருக்கிறார்.

படத்தொகுப்பு - ரூபன், ஒளிப்பதிவு - ஓம் பிரகாஷ், இசை - ஜிப்ரான், வெளியீடு - டிரைடண்ட் ஆர்ட்ஸ்தயாரிப்பு - கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ், கதை, திரைக்கதை, இயக்கம் - கோபி நயினார்.

படம் குறித்து `டிரைடண்ட் ஆர்ட்ஸ்' ரவீந்திரன் அவர்கள் பேசுகையில்,

''இந்த வருடத்தின் முக்கியமான படங்களில் ஒன்றாக 'அறம்' இருக்கும். அவ்வளவு வலுவான கதையம்சம் கொண்ட படம் இது. இயக்குனர் கோபி நைனார் இந்த கதையை அருமையாக கையாண்டுள்ளார். ஒரு நேர்மையான கலெக்டராக நயன்தாரா அசத்தியுள்ளார். 'அறம்' படத்தை ரிலீஸ் செய்வதில் எங்களுக்கு மிகுந்த பெருமை''

SCROLL FOR NEXT