சினிமா

ஜோதிகா வேடத்தில் நடிக்க மறுத்த அனுஷ்கா

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடித்து வரும் அனுஷ்கா, ஜோதிகா நடித்த வேடத்தில் நடிக்க மறுத்திருக்கிறார். #Anushka

ஜோதிகா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘நாச்சியார்’. பாலா இயக்கிய இப்படத்தில் ஜோதிகாவுடன் ஜி.வி.பிரகாஷ், இவானா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படம் வெளியாவதற்கு முன்பு பல சர்ச்சைகள் எழுந்தாலும், வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த படத்தின் தெலுங்கு உரிமையை கல்பனா என்பவர் வாங்கியிருந்தார். இதில் நடிக்க அனுஷ்காவிடம் பேசப்பட்டது. தொடர்ந்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் அனுஷ்கா நடித்து வருகிறார். 

கடைசியாக அவர் பாகமதி படத்தில் நடித்திருந்தார். இதனால் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள ‘நாச்சியார்’ கதையிலும் அவர் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வேறொரு தெலுங்கு படத்தில் நடிக்க கதை கேட்டிருப்பதாகவும் இதற்காக தொடர்ந்து 6 மாதத்துக்கு கால்ஷீட் ஒதுக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் ‘நாச்சியார்’ ரீமேக் படத்தில் அனுஷ்கா நடிக்கவில்லையாம்.

SCROLL FOR NEXT