‘பாகுபலி’ முதல் பாகத்தில் நடித்த அனுஷ்காவுக்கு ‘பாகுபலி-2’-ல் அதிக முக்கியத்துவம் வாய்ந்த வேடம். எனவே முதல் பாகத்தில் இருந்தது போல அனுஷ்கா உடல் மெலிய வேண்டும் என்று ராஜமவுலி விரும்பினார். இதற்காக அனுஷ்கா தொடர்பான காட்சிகளை கடைசியில் படமாக்கினார். அதற்குள் உடல் எடையை குறைக்க அவகாசம் அளித்தார். ஆனால் அவர் எதிர்பார்த்தது நடக்கவில்லை. எனவே கிராபிக்ஸ் மூலம் அனுஷ்காவை ஒல்லியாக காண்பிக்க பல கோடி செலவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
உடல் எடை அதிகமான அனுஷ்காவை ‘குண்டு ஆன்டி’ என்று ரசிகர்கள் கேலி செய்தனர். உணவு கட்டுப்பாடு, ஜிம்மில் உடற்பயிற்சி எல்லாம் செய்து பார்த்தார், பயன்இல்லை. எனவே, யோகா பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு உடல் எடையை குறைக்க அனுஷ்கா முடிவு செய்திருக்கிறார்.
தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொள்வதால் யோகா, உடற்பயிற்சியில் நீண்டநேரம் பங்கேற்க முடியவில்லை. எனவே, நடிப்புக்கு தற்காலிகமாக சிறிய விடுமுறை விடமுடிவு செய்துள்ளார். இதில் எப்படியாவது உடல் எடையை குறைத்துவிடலாம் என்று நம்புகிறார்.