சினிமா

உடல் எடையைக் குறைப்பதில் தீவிரம் காட்டும் அனுஷ்கா

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை அனுஷ்கா அவரது உடல் எடையைக் குறைக்க அவரது வீட்டையே உடற்பயிற்சி கூடமாக மாற்றியிருக்கிறார்.

பின்னர் ‘பாக்மதி’ என்ற படத்தில் நடித்தார். அதன்பிறகு உடல் எடை குறைத்த பிறகே படங்களில் நடிப்பது என்பதில் உறுதியாக இருந்தார். எனவே, தீவிர உடற்பயிற்சிக்காக ஐதராபாத்தில் உள்ள தனது வீட்டில் அனுஷ்கா அதிநவீன உடற்பயிற்சி கூடத்தை அமைத்தார். ஒரு பயிற்சியாளரையும் நியமித்தார்.

இங்கு தினமும் இடைவிடாமல் பயிற்சி செய்தார். இதற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது. பல மாதங்களாக அவர் செய்த பயிற்சியால் எடை குறைந்து பழைய தோற்றத்துக்கு வந்திருக்கிறார். இதுவரை புதிய படங்களை ஏற்காமல் இருந்த அனுஷ்கா, இப்போது புதிய படங்களுக்கு கதைகேட்க தொடங்கி இருக்கிறார். ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.