சினிமா

ரசிகர்களை கவர ‘அண்ணா துரை’ படக்குழு புதுமுயற்சி

ஜி.ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி - டயனா சாம்பிகா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அண்ணா துரை’ படக்குழு புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது.

மாலை மலர்

விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் டயனா சாம்பிகா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் மகிமா, ஜூவல் மேரி, ராதா ரவி, காளி வெங்கட், நளினிகாந்த், ரிந்து ரவி உள்பட பலர் நடிக்கிறார்கள். இப்படத்தில் விஜய் ஆண்டனி இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜி.ஸ்ரீனிவாசன் இயக்கும் இந்த படத்திற்கு இசையமைத்துள்ள விஜய் ஆண்டனியே படத்தொகுப்பு பணிகளையும் மேற்கொண்டுள்ளார்.
இப்படத்தின் பிரம்மாண்ட ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெறுகிறது. இதில் பாடல் வெளியீட்டின் போதே பாடல்கள் அனைத்தும் விஜய் ஆண்டனியின் வலைத்தளத்திலும் வெளியிடப்படுகிறது. ரசிகர்கள் www.vijayantony.com என்ற இணையதளத்திற்கு சென்று பாடல்களை இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.