சினிமா

இந்தியாவின் முதல் முகவரி பாடலை வெளியிடும் அனிருத்

ரத்ன குமார் இயக்கத்தில் நடிகர் வைபவின் `மேயாத மான்' படத்தில் இருந்து இந்தியாவின் முதல் முகவரி பாடலை இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் வெளியிடவிருக்கிறார்.

மாலை மலர்

வைபவ் - ப்ரியா பவானிஷங்கர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வரும் இந்த படத்தை ரத்ன குமார் இயக்குகிறார். பிரதீப் குமார் மற்றும் சந்தோஷ் நாராயண் இந்த படத்திற்கு இசையமைக்கின்றனர். ஏற்கனவே படத்தில் இருந்து `தங்கச்சி' மற்றும் `என்ன நான் செய்வேன்' என்ற இரு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

இந்நிலையில், `மேயாத மான்' படத்தில் இருந்து அடுத்த பாடல் இன்று வெளியாக இருக்கிறது. இந்தியாவின் முதல் முகவரி பாடலாக (Address Song) வெளியாக இருக்கும் `அடியே எஸ்.மது' பாடலை இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் வெளியிடுகிறார்.

அதனைத் தொடர்ந்து படத்தை வருகிற நவம்பரில் வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.