சினிமா

அனிருத்

ஸ்ரீகாந்த் இயக்கத்தில் மகேஷ்பாபு - காஜல் அகர்வால், சமந்தா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அனிருத்’ படத்தின் முன்னோட்டம்.

சித்தாரா எண்டர்டைன்மெண்ட்ஸ் வழங்க சுவாதி, வர்ஷினியின் பத்ரகாளி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் பத்ரகாளி பிரசாத், இணை தயாரிப்பாளர்கள் சத்யசீத்தால, வெங்கட்ராவ் தயாரிக்கும் படம் ‘அனிருத்’.

தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற ‘பிரம்மோற்சவம்’ படமே தமிழில் ‘அனிருத்’ என்ற பெயரில் தயாராகிறது.

இந்த படத்தில் மகேஷ்பாபு நாயகனாக நடித்துள்ளார். நாயகிகளாக காஜல் அகர்வால், சமந்தா, பிரணிதா நடிக்கிறார்கள். இவர்களுடன் சத்யராஜ், நாசர், ரேவதி, ஷாயாஜி ஷிண்டே, ஜெயசுதா, முகேஷ்ரிஷி ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு - ரத்னவேலு, இசை - மிக்கி ஜே.மேயர், தயாரிப்பு - பத்ரகாளி பிரசாத், இயக்கம் - ஸ்ரீகாந்த், வசனம் மற்றும் ஒருங்கிணைப்பு ஏ.ஆர்.கே. ராஜராஜா.

படம் பற்றி அவரிடம் கேட்ட போது....

“உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களும் உறவுகளாலும், அன்பினாலும் பின்னப்பட்டவை தான். தனது உறவுகள் பசித்திருக்க அடுத்தவர்க்கு தானம் செய்வதை விட மோசமான காரியம் வேறு எதுவும் இல்லை .

நம்மீது அன்பு செலுத்தி நம் அருகிலேயே இருக்கும் உறவுகளை நாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் நம்மை விட்டு போன பிறகு அவர்களை நினைத்து வருத்தப் படுவோம். அப்படி அன்பான ஒரு உறவை இழந்த நாயகன் தனது ஏழு தலைமுறை உறவுகளையும் தேடி கண்டுபிடிப்பதுதான் திரைக்கதை. குடும்பத்தில் உள்ள அனைவரும் நெகிழ்வோடு பார்க்க கூடிய படம் இது” என்றார்.

SCROLL FOR NEXT