சினிமா

அனைத்து தடைகளை தாண்டியது மெர்சல்

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் மெர்சல் படத்திற்கு விலங்குகள் நலவாரியம் தடையில்லா சான்றிதழ் வழங்கி உள்ளது.

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மெர்சல் திரைப்படம் வரும் புதன்கிழமை திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில், படத்தில் இடம்பெறும் புறா சம்மந்தப்பட்ட காட்சிகளுக்கு விலங்குகள் நல வாரியம் சான்றளிக்கவில்லை எனக்கூறி படம் ரிலீசில் சிக்கல் ஏற்பட்டது.

இன்று சென்னை வந்த விலங்குகள் நலவாரிய குழுவினர், ‘மெர்சல்’ படத்தை பார்த்து, புறா சம்மந்தப்பட்ட காட்சிகள் கிராபிக்ஸ் என்று உறுதிசெய்யப்பட்டு, மெர்சல் படத்திற்கு தடையில்லா சான்றிதழ் வழங்கியுள்ளது. மேலும், படத்தில் இடம் பெறும் ஒரு சில காட்சிகளை நீக்க சொன்னதாக கூறப்படுகிறது.

தற்போது விலங்குகள் நல வாரியம் தடையில்லா சான்றிதழ் வழங்கியுள்ளதால், தீபாவளி தினத்தில் ‘மெர்சல்’ படம் திட்டமிட்டப்படி வெளியாக உள்ளது.

SCROLL FOR NEXT