சினிமா

ரஜினியுடன் நடிகர் ஆனந்தராஜ் திடீர் சந்திப்பு

ரஜினி அரசியலில் ஈடுபடப்போகிறார் என்பது அவரது பேச்சிலிருந்தே தெரிகிறது. இந்நிலையில், நடிகர் ஆனந்த்ராஜ் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார்.

மாலை மலர்

ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு சிலர் ஆதரவாகவும், சிலர் எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். ரஜினி அரசியலுக்கு வரப்போவது நூறு சதவீதம் உண்மை என அவர் நண்பர் ராஜ் பகதூரும் கூறியிருந்தார்.

இதற்கிடையே ரஜினி ஜூலை மாதம் தனிக்கட்சி தொடங்குவார் என்று அவருடைய அண்ணன் சத்யநாராயணா தெரிவித்து இருக்கிறார். இந்தநிலையில், நடிகர் ஆனந்தராஜ் ரஜினியை அவரது வீடு இருக்கும் போயஸ்கார்டன் இல்லத்தில் சந்தித்து பேசினார்.