சினிமா

`டிக் டிக் டிக்' படக்குழுவின் முக்கிய அறிவிப்பு

சக்தி சவுந்தர் ராஜள் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் இந்தியாவின் முதல் விண்வெளி படமான `டிக் டிக் டிக்' படக்குழு இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது.

சக்தி சவுந்தர் ராஜன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் இந்தியாவின் முதல் விண்வெளி படமாக உருவாகி வருகிறது. இதில் ஜெயம் ரவி ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்கிறார். ஆரோன் ஆசிஸ் என்பவர் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார். மேலும் ஜெயப்பிரகாஷ், ரமேஷ் திலக், வின்சென்ட் அசோகன், அர்ஜுனன், ஜெயம் ரவி மகன் ஆரவ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

சமீபத்தில் வெளியாகிய இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவெற்பை பெற்றுள்ளது. டீசர் வெளியானது முதல் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் கூடியிருக்கிறது. நேமிசந்த் ஜபக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் நேமிசந்த் ஜபக் மற்றும் ஹதேஷ் ஜபக் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று இன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என்று `டிக் டிக் டிக்' படக்குழு அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT