இங்கிலாந்து மாடலாக இருக்கும் எமிஜாக்சன், பல முன்னணி நிறுவனங்களின் விளம்பரங்களில் நடித்து இருக்கிறார். அந்த நிறுவன பொருட்களுக்கான விளம்பர தூதுவராகவும் இருந்து வருகிறார். ரஜினியுடன் ‘2.0’ படத்தில் நடித்துள்ள எமிஜாக்சன், இப்போது உலகம் முழுவதும் பிரபலமாகி இருக்கும் ‘சூப்பர்கேர்ள்’ என்ற அமெரிக்க டி.வி.தொடரில் நடிக்கிறார்.
இவருடைய நடிப்பில் உருவான இந்த டி.வி. தொடரின் முதல் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. இதில், எமிஜாக்சன் ஆங்கில நடிகர் ஒருவருக்கு உதட்டுடன் உதடு சேர்த்து முத்தம் கொடுத்துள்ளார். அவருடைய முத்தக்காட்சி யுடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.