சினிமா

கன்னட பெண் என்றாலும் தமிழ் என் தாய் மொழி ஆனது - ‘நந்தினி’ நித்யாராம்

தான் கன்னட பெண் என்றாலும், தமிழ் என் தாய் மொழி ஆனது என்று சின்னத்திரை தொடரான ‘நந்தினி’ -யில் நடித்து வரும் நித்யாராம் தெரிவித்திருக்கிறார்.

மாலை மலர்

“முதலில் தமிழ் மற்றும் கன்னடத்தில் நடிக்கும் போது தயக்கமாக இருந்தது. ஷுட்டிங்கில் கூட மிகவும் பயமாக இருந்தது. ஆனால் இப்போது எந்த பயமும் இல்லாமல் சகஜ நிலைக்கு வந்து விட்டேன். நான் கன்னடத்து பெண் என்றாலும், தற்போது தமிழ் நன்கு பழகி விட்டது. தமிழ் எனக்கு தாய் மொழியாகி விட்டது. இப்போது எனக்கு கன்னடத்தை விட தமிழில் நடிப்பது எளிதாக இருக்கிறது.

சினிமாவில் நடிப்பது போன்ற உணர்வு தான் சின்னத்திரையில் இருக்கிறது. எனது உடை மற்றும் சிகை அலங்காரத்தை குஷ்பு மேடம் தான் தேர்வு செய்வார். இங்கு வந்து பல வி‌ஷயங்களை கற்றுக் கொண்டேன். பல நாடுகளில் இருந்து தொடர்பு கொண்டு ‘நந்தினி’ தொடர் பற்றி ரசிகர்கள் பேசுகிறார்கள். அது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதில் நடிப்பதால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இதன் இயக்குனர் ராஜ்கபூர் சாருக்கு நன்றி”.