தமன்னா, விதார்த், பாலா, சந்தானம், நாசர், தம்பி ராமையா, அப்புக்குட்டி, ரமேஷ் கண்ணா, இளவரசு, அபிநயா உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்த படத்திற்கு தமிழில் கிடைத்த அமோக வரவேற்பினால் தெலுங்கில் `கட்டமராயுடு' என்ற தலைப்பில் ரீமேக் செய்யப்பட்டது.
தெலுங்கு ரீமேக்கில் பவண் கல்யாண் - சுருதி ஹாசன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தெலுங்கிலும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் அடுத்ததாக இந்தியிலும் இந்தப்படம் ரீமேக் செய்யப்படுகிறது.
பாலிவுட் இயக்குநர் பர்காத் இயக்கவிருக்கும் இந்த படத்திற்கு `லேண்ட் ஆஃப் லுங்கி' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அஜித் நடித்த கதாபாத்திரத்தில் பாலிவுட் பிரபலம் அக்ஷய் குமார் நடிக்கிறார். சாஜித் நாடியாவாலா இந்த படத்தை தயாரிக்கிறார்.