சினிமா

வடிவேலுடன் ஜோடி சேர்ந்த அஜித் நாயகி

வடிவேலு தற்போது கதாநாயகனாக நடிக்க இருக்கும் புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக அஜித்துடன் இணைந்து நடித்த நடிகை நடிக்கிறார்.

மாலை மலர்

இதில் வடிவேலுக்கு ஜோடியாக பார்வதி ஓமனக்குட்டன் நடிக்கிறார். இவர் இதற்கு முன் அஜித்துக்கு ஜோடியாக ‘பில்லா 2’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்குப் பிறகு மலையாளம், இந்தி படங்களில் நடித்த இவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் `இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி' படம் மூலம் தமிழுக்கு வருகிறார்.

சிம்பு தேவன் இயக்கத்தில் 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' கடந்த 2006-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. முதல் முறையாக வடிவேலு இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் வெளியாகி மிகப்பெரிய வசூலையும் குவித்தது.