சினிமா

ஜெய் ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ்

அறம் படத்தை இயக்கிய கோபி நயினார் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Jai #AishwaryaRajesh

அறம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அறம் படத்தின் இரண்டாம் பாகத்தை கோபி நயினார் இயக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், அதற்கு முன்பாக வடசென்னை பின்னணியில் புதிய படமொன்றை இயக்குகிறார் கோபி. இந்த படத்தில் நாயகனாக ஜெய் நடிக்கிறார்.

ஜெய் ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. குத்துச் சண்டையை மையப்படுத்தி இந்த படம் உருவாகுவதாக முன்னதாக கூறப்பட்ட நிலையில், வட சென்னையில் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களின் திறமை மற்றும் அந்த பகுதியில் வாழும் இளைஞர்களின் கால்பந்தாட்ட திறமையை மையப்படுத்தி இந்த படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.

காமெடி நடிகர் டேனியல் அனி போப் மற்றும் கல்லூரி வினோத் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை முடித்த பிறகு அடுத்த ஆண்டு அறம் படத்தின் இரண்டாம் பாகத்தை கோபி நயினார் இயக்கவிருப்பதாக கூறப்படுகிறது. #Jai #AishwaryaRajesh #GopiNainar