சினிமா

விஜய்க்கு பிறகு தற்போது தனுஷ்

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் நடிப்பில் ‘மெர்சல்’ படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், அடுத்ததாக தனுஷ் தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

இந்த படத்தின் வசூல் ரூ.200 கோடியை தாண்டி இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறது. தெலுங்கிலும் ‘அதிரிந்தி’ படத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளதால், அங்கும் வசூல் சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில், மெர்சல் படத்தை தொடர்ந்து அடுத்ததாக தனுஷ் நடிக்கும் படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்க இருப்பதாக  ஹேமா ருக்மணி அவரது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.