சினிமா

ராமை தொடர்ந்து ராம் பட நாயகனுக்கு வில்லனாகும் மிஷ்கின்

ராம் இயக்கத்தில் தரமணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான வஸந்த் ரவி அடுத்ததாக நடிக்கவிருக்கும் படத்தில் இயக்குநர் மிஷ்கின் வில்லனாக நடிக்க இருக்கிறார். #VasanthRavi #Myyskin

இயக்குநர் ராம் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் தரமணி. தற்போதைய இளைஞர்கள், அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் இந்த படத்தின் மூலம் வஸந்த் ரவி நாயகனாக அறிமுகமானார். 

இந்நிலையில் வஸந்த் ரவியின் அடுத்த படம் விரைவில் தயாராக இருக்கிறது. இந்த படத்தை தியாகராஜன் குமாரராஜா, புஷ்கர் காயத்ரியிடம் இணை இயக்குநராக பணியாற்றிய அருண் மாதேஸ்வரன் இயக்கவிருக்கிறார். சமீபத்தில் இவர், இயக்குநர் மிஷ்கினை சந்தித்து படத்தின் கதையை விளக்கியதாகவும், மிஷ்கினுக்கு கதை பிடித்துப் போக, விரைவில் அவர் ஒப்பந்தமாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மிஷ்கின் இதற்கு முன்னதாக சவரக்கத்தி படத்தில் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தர்புகா சிவா இசையமைக்கும் இந்த படத்திற்கு ஸ்ரேயாஷ் கிருஷ்ணா ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள இருக்கிறார். படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. #VasanthRavi #Myyskin