சினிமா

2 மாத சிறைவாசத்திற்கு பிறகு வெளியே வந்தார் நடிகர் திலீப்

நடிகை கடத்தல் வழக்கில் கடந்த 2 மாதமாக சிறைவாசத்தை அனுபவித்து வரும் மலையாள நடிகர் திலீப் சிறையில் இருந்து வெளியே வந்திருக்கிறார்.

மாலை மலர்

நடிகை துணிச்சலாக கொடுத்த புகாரின் பேரில் பிரபல ரவுடி பல்சர் சுனில், அந்த நடிகையின் கார் டிரைவர் மார்ட்டின், பல்சர் சுனிலின் கூட்டாளிகள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இதன் பிறகு அதிரடியாக நடிகர் திலீப் (வயது 48) கடந்த ஜூலை மாதம் 10-ந்தேதி கைது செய்யப்பட்டு ஆலுவா கிளை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

சிறைவாசம் அனுபவித்து வரும் திலீப் அங்கமாலி நீதிமன்றம் மற்றும் கேரள உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டது.