உங்கள் சினிமா வருகை பற்றி?
எதிர்பாராதவிதமாக தான் சினிமாவுக்குள் வந்தேன். பட்டதாரி படம் பண்ணும்போது எனக்கு எந்த ஐடியாவும் கிடையாது. அதிர்ஷ்டவசமாக எனது இரண்டாவது படமான சந்தனதேவன் அமீர் இயக்கத்தில் ஆர்யாவுடன் அமைந்தது. அதன் பிறகு ஒரு பெரிய படத்தில் கமிட் ஆனேன். ஆனால் அதன் படப்பிடிப்பு சரியான நேரத்தில் தொடங்காததால், அதில் இருந்து விலகி மலையாள படம் ஒன்றில் நடித்தேன்.
களவாணி மாப்பிள்ளை எனக்கு நான்காவது படம். ஆனால் இரண்டாவதாக ரிலீஸ் ஆகியிருக்கிறது. எனக்கு எல்லா மாதிரியான கதாபாத்திரங்களிலும் நடிக்க பிடிக்கும். சந்தனதேவன் ரிலீஸ் ஆவதற்கு தாமதமாவதால், என்னுடைய முகத்தை வெளி உலகுக்கு தெரியப்படுத்துவதற்கு ஒரு கமர்சியல் படம் தேவைப்பட்டது. அதனால் தான் களவாணி மாப்பிள்ளை படத்தில் நடித்தேன். அதற்காக கமர்சியல் படங்களில் மட்டும் தான் நடிப்பேன் என்றில்லை. எல்லா படங்களிலும் நடிக்க தயாராக இருக்கிறேன். எல்லாவற்றையும் பரிசோதனை செய்ய தான் நான் விரும்புகிறேன்.
குடும்பப்பாங்கான வேடம் மட்டும்தானா?
களவாணி மாப்பிள்ளை படத்தில் நான் குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். அதேசமயம் கவர்ச்சி வேடத்திலும் நடிக்க தயாராக இருக்கிறேன். என்னை பொறுத்தவரை கதைக்கு தேவைப்பட்டால் கவர்ச்சி காட்டுவதில் தவறில்லை. அர்ஜூன் ரெட்டி போன்ற படங்களில் குடும்பப்பாங்காக தான் நடிப்பேன் என சொல்ல முடியுமா. அது போன்ற படங்களில் நடிக்கவும் விரும்புகிறேன்.
உங்கள் ரோல் மாடல் யார்?
சமூக வலைதளங்களில் பார்க்க முடியவில்லையே?
சந்தனதேவன் படத்தில் தான் எனது கவனம் முழுக்க இருந்தது. எனது கதாபாத்திரத்திற்காக நான் எந்தளவுக்கு வேண்டுமானாலும் விட்டுக்கொடுத்து போக தயாராக இருப்பேன். சந்தனதேவன் படத்தில் நடித்த போது சுமார் ஒன்றரை ஆண்டுகள், சமூக வலைதளங்களை பயன்படுத்தாமல், பேட்டி கொடுக்காமல், விளம்பரப் படங்கள் செய்யாமல் இருந்தேன். முகநூலில் கூட ஒரு பதிவு போட்டது இல்லை. வெற்றி கிடைக்கும் வரை உழைத்துக்கொண்டே, முயற்சித்துக்கொண்டே தான் இருப்பேன். ஓடிப்போக மாட்டேன்.
மீடூ?
மிகவும் வரவேற்கப்பட வேண்டிய ஒரு இயக்கம். ஆனால் பிரச்சினையோ நெருக்கடியோ ஏற்படும்போது அதனை உடனே வெளிப்படுத்திவிட வேண்டும். காத்திருக்க கூடாது. மீடூவில் சமூக வலைதளங்களில் பகிரும் வரை காத்திருக்காமல் உடனே வெளிப்படுத்தி தண்டனை வாங்கி தரவேண்டும்.
அடுத்து?
தற்போது ஒரு பெரிய படத்தில் கமிட் ஆகியிருக்கிறேன். விரைவில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.