சினிமா

தெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்

பட அதிபர்கள் வேலை நிறுத்தத்தால் தமிழ் படங்களில் நடித்து கொண்டிருந்த நடிகைகள் தெலுங்கு, மலையாள படங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

மாலை மலர்

விஜய் நடித்த படம் உள்பட 4 படங்களுக்கு ஓரிரு நாட்கள் படப்பிடிப்புகளை நடத்த அனுமதி வழங்கி பின்னர் அவற்றின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டன. கடந்த 21-ந்தேதி தொடங்க திட்டமிட்டு இருந்த அஜித்குமாரின் விசுவாசம் படப்பிடிப்பும் நின்று போனது. முன்னணி கதாநாயகர்கள் படப்பிடிப்புகள் இல்லாமல் வீட்டில் இருக்கிறார்கள்.

கதாநாயகிகள் பலர் தமிழ் படங்களுக்கு வழங்கிய கால்ஷீட்களை தெலுங்கு, மலையாள படங்களுக்கு ஒதுக்கி அந்த படங்களில் நடித்து வருகிறார்கள். அஜித்குமார் ஜோடியாக நடிக்க விசுவாசம் படத்துக்கு நயன்தாராவை ஒப்பந்தம் செய்து இருந்தனர். அவர் கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம் ஆகிய படங்களிலும் நடித்து வந்தார்.

ஸ்டிரைக் காரணமாக தெலுங்கு படத்தில் நடிக்க சென்று விட்டார் நயன்தாரா. அங்கு சிரஞ்சீவி ஜோடியாக சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமந்தா தமிழில் இரும்புத்திரை படத்தை முடித்து விட்டு சிவகார்த்திகேயனுடன் சீமத்துரை படத்தில் நடிக்க தயாராகி வந்தார். அவரும் ஸ்டிரைக்கால் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்துகிறார்.