சினிமா

டிரைவரை கையும் களவுமாக பிடித்த நடிகை வரலட்சுமி

சினிமா துறையில் உள்ளவர்களே இப்படி செய்யலாமா? என்று நடிகை வரலட்சுமி அவரது கார் டிரைவரை திட்டி தீர்த்திருக்கிறார்.

தமிழ் சினிமா சந்தித்து வரும் முக்கிய பிரச்சனைகளில் திருட்டு டிவிடி மற்றும் பைரேசியும் அடங்கும்.

தயாரிப்பாளர் சங்கத் தலைவராக பொறுப்பேற்றுள்ள நடிகர் விஷால் பைரசியை தடுக்க முழுமுயற்சி எடுத்து வருவதாக கூறியிருகிறார். பைரேசியால் தயாரிப்பாளர்கள் பலருக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. எனவே அதனை தடுக்க போராடி வருகின்றனர்.

மேலும் சமீபத்தில் நடைபெற்ற `துப்பறிவாளன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஷால் பேசிய போது, பைரசி வேலை செய்யும் நபர்களை தான் கண்டுபிடித்துவிட்டதாகவும், அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியும் என்றும் கூறினார். மேலும் அவர்கள் யார், அவர்கள் தனி நபரா அல்லது ஒரு குழுவா என்பதை இன்னும் இரண்டு வாரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் அறிவிப்பேன் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், நடிகை வரலட்சமி சமீபத்தில் படப்பிடிப்புக்கு சென்ற போது, கேரவன் டிரைவர், தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய `வேலையில்லா பட்டதாரி 2' படத்தை இணையதளத்தில் பார்த்துக் கொண்டிருப்பதை கண்டுபிடித்துவிட்டார். இதையடுத்து சினிமா துறையில் உள்ளவர்களே இப்படி தவறு செய்யலாமா? என்று டிரைவரை சரமாரியாக திட்டியதாக வரலட்சுமி அவரது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார்.

SCROLL FOR NEXT