சாமி தரிசனம் செய்ய தமன்னா வந்த காட்சி. 
சினிமா

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தமன்னா தரிசனம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடிகை தமன்னா இன்று தரிசனம் செய்தார்.

மதுரை பகுதியில் படப்பிடிப்புக்காக வந்த நடிகை தமன்னா இன்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தார்.

அம்மன் சன்னதி வழியாக கோவிலுக்குள் சென்ற தமன்னா மீனாட்சி அம்மன் சன்னதி, சுந்தரேசுவரர் சன்னதிகளுக்கு சென்று பக்தர்களுடன் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தார்.

நடிகை தமன்னா கோவிலுக்கு வந்த தகவல் அறிந்த அவரது ரசிகர்கள் கோவில் முன்பு திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

சாமி தரிசனம் முடிந்து வெளியே வந்த தமன்னாவை போலீசார் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.