சினிமா

TV தொடர்களில் நடிப்பதில் இருந்து தற்காலிக இடைவெளி எடுப்பதாக நடிகை ஜென்னா ஒர்டேகா அறிவிப்பு

இனிவரும் காலங்களில் அவர் முழுநீளத் திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்த விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நடிகை ஜென்னா ஒர்டேகாTV தொடர்களில் நடிப்பதில் இருந்து தற்காலிகமாக இடைவெளி எடுப்பதாக அறிவித்துள்ளார்.

பிரபல நெட்பிளிக்ஸ் தொடரான 'Wednesday' இல் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துப் புகழ்பெற்ற நடிகை ஜென்னா ஒர்டேகா (Jenna Ortega), தொலைக்காட்சி மற்றும் இணையத் தொடர்களில் (TV/Web Series) நடிப்பதில் இருந்து தற்காலிகமாக ஒரு இடைவெளி எடுக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

சமீபத்தில் Wednesday தொடரின் 3வது சீசன் நிறைவடைந்த நிலையில் இதனை அறிவித்துள்ளார்

சமீபத்தில் ஜோஷ் ஹொரோவிட்ஸின் 'ஹேப்பி சாட் கன்ஃபியூஸ்டு' பாட்காஸ்டில் கலந்துகொண்டபோது, ​​ஒர்டேகா ஹாலிவுட்டில் தனது எதிர்காலம் குறித்தும், வித்தியாசமான முடிவை குறித்து ஆராய இருப்பதாக தெரிவித்துள்ளார்.

'ஹேப்பி சாட் கன்பியூஸ்' (Happy Sad Confused) என்பது பிரபல ஹாலிவுட் ஊடகவியலாளர் மற்றும் எம்டிவி நியூஸ் (MTV News) நிருபரான ஜோஷ் ஹொரோவிட்ஸ் (Josh Horowitz) என்பவரால் நடத்தப்படும் மிகவும் பிரபலமான ஒரு வாராந்திர பாட்காஸ்ட் நிகழ்ச்சியாகும்.

திரைப்படங்களில் கவனம் செலுத்த திட்டம்

குழந்தை நட்சத்திரமாக இருந்த காலத்திலிருந்தே அடுத்தடுத்து தொலைக்காட்சித் தொடர்களில் தொடர்ந்து நடித்து வருவதால், தற்போது புதிய முயற்சிகளுக்கு இடம் கொடுக்கும் வகையில் இந்தத் முடிவை எடுத்துள்ளார். இனிவரும் காலங்களில் அவர் முழுநீளத் திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்த விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT