சினிமா

விமர்சனம் செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் அஞ்சலி

குண்டாக இருப்பதாக சமீபத்தில் சில விமர்சனங்கள் வெளியாகி வந்த நிலையில், அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அஞ்சலி தனது உடல் எடையை குறைக்க ‘ஜிம்’மில் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். #Anjali

விஜய் ஆண்டனி ஜோடியாக காளி படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது. சசிகுமாருடன் நாடோடிகள்-2 படத்தில் நடித்து வருகிறார். குண்டூர் டாக்கீஸ் என்ற தெலுங்கு படத்திலும் நடிக்கிறார். கார்த்தி சுப்புராஜ் இயக்கும் படத்தில் ரஜினிகாந்துடன் நடிக்கவும் அவர் பரிசீலனையில் இருக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

அஞ்சலி உடல் எடை கூடி குண்டாக இருப்பதாக சமீபத்தில் விமர்சனங்கள் கிளம்பின. அவரை வைத்து படம் இயக்கும் டைரக்டர்களும் கதாபாத்திரத்துக்காக உடல் எடையை குறைக்கும்படி வற்புறுத்தினர்.

SCROLL FOR NEXT