சினிமா

அரவிந்த்சாமி படத்தில் நடிக்க ஒப்பந்தமான ஆத்மிகா

‘மீசையை முறுக்கு’ படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமாகிய ஆத்மிகாவுக்கு படவாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அந்த வகையில் அவர் நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

முதல் படத்திலேயே நல்ல வரவேற்பு கிடைத்ததால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் `துருவங்கள் பதினாறு' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான கார்த்திக் நரேன் அடுத்ததாக இயக்கவிருக்கும் `நரகாசூரன்' படத்தில் ஆத்மிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலை கார்த்திக் நரேன் அவரது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். ஏற்கனவே அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன், இந்திரஜித் சுகுமாரன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றனர்.

கவுதம் மேனனின் ஒண்ராகா என்டர்டெயின்மெண்ட் மற்றும் கார்த்திக் நரேனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான நோஸ்டால்ஜியா பிலிமோடெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு ரோன் ஈதன் யோகன் இசையமைக்கிறார்.

SCROLL FOR NEXT