சினிமா

கின்னஸ் சாதனைக்காக மாணவர்களுடன் இணையும் ஆரி

கின்னஸ் உலக சாதனைக்காக 5000 மாணவர்களுடன் நாற்று நடும் நிகழ்வு நடத்த இருக்கிறார் நடிகர் ஆரி.

நடிகர் ஆரி, படங்களில் நடிப்பதை தவிர்த்து, சமூகத்தில் பல நல்ல விஷயங்களில் தன்னுடைய பங்கை செலுத்தி வருகிறார். ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, மதுரை, சென்னை உள்ளிட்ட பல இடங்களில் பொது மக்களோடு கலந்துக் கொண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தார். மேலும் நாடு முழுவதும் நடக்கும் வங்கிகளின் கட்டணக் கொள்கையை எதிர்த்து "அஞ்சல் துறைக்கு மாறுவோம் வங்கிக்கொள்ளையை மாற்றுவோம்" என்று மாணவர்களுடன் இணைந்து இந்திய அஞ்சல் வங்கிக் கணக்கை தொடக்கிவைத்தார்.

தற்போது 'மாறுவோம் மாற்றுவோம்' அறக்கட்டளை சார்பில் ​​'நானும் ஒரு விவசாயி' எனும் கின்னஸ் உலக சாதனைக்காக 5000 மாணவர்கள் பங்கேற்று நாற்று நடும் நிகழ்வு நடத்த இருக்கிறார். இந்நிகழ்வு நல்லநிலம், ஆவணிப்பூர், திண்டிவனம் எனும் இடத்தில் நடைபெறயுள்ளது.

SCROLL FOR NEXT