சினிமா

ஆரியின் பெண் குழந்தைக்கு லண்டனில் பெயர் சூட்டு விழா

நடிகர் ஆரி தனக்கு பிறந்த பெண் குழந்தைக்கு லண்டனில் பெயர் சூட்டு விழா நடத்தியுள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.

மாலை மலர்

லண்டனில் பிறந்த குழந்தையை காண்பதற்காக சமீபத்தில் ஆரி லண்டன் சென்றிருந்தார். இதையடுத்து, லண்டனில் குடும்பத்தார்கள் முன்னிலையில் எளிமையான முறையில் பெயர் சூட்டு விழா நடத்தி முடித்துள்ளார். அப்போது குழந்தைக்கு ஆரி-நதியா இருவருடைய பெயர்களில் உள்ள எழுத்துக்கள் குழந்தையின் பெயருக்கு வரும்படி ‘ரியா அனகாரிகா’ என்று பெயர் சூட்டியுள்ளனர்.