சினிமா

பிப்ரவரி 2-ந் தேதி மோதும் 5 படங்கள்

வருகிற பிப்ரவரி 2-ஆம் தேதி விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் நடிப்பில் ‘ஒரு நல்ல நாள்பார்த்து சொல்றேன்’, சமுத்திரக்கனி நடிப்பில் ‘ஏமாலி’, ‘மதுரவீரன்’ உள்ளிட்ட 5 படங்கள் ரிலீசாகிறது. #ONNPS #Yemali #MaduraVeeran

மாலை மலர்

2017-ம் ஆண்டு 200-க்கும் அதிகமான தமிழ் படங்கள் வெளியாகின. 2018-ம் ஆண்டும் அதே எண்ணிக்கையில் படங்கள் வர வாய்ப்பு உள்ளது. இந்த ஜனவரி மாதம் மட்டும் வெள்ளிக்கிழமைகளில் 14 படங்கள் வெளியாகி இருக்கின்றன.

அடுத்த மாதமும் அதிக எண்ணிக்கையில் படங்கள் வெளியாக வாய்ப்புகள் உள்ளன. பிப்ரவரி 2-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மட்டும் 5 படங்கள் திரைக்கு வர இருக்கின்றன.

இதில் விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் நடித்த ‘ஒரு நல்ல நாள்பார்த்து சொல்றேன்’ படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அறிமுக இயக்குனர் ஆறுமுககுமார் இதை இயக்கி இருக்கிறார். மற்றொரு படம் வி.இசட். துரை இயக்கத்தில் சமுத்திரக்கனி, அதுல்யா நடித்துள்ள ‘ஏமாலி’.

3-வது படம் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் நடித்து இருக்கும் ‘மதுரவீரன்’. ஜல்லிக்கட்டை பின்னணியாக கொண்ட கதை. பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த பி.ஜி.முத்தையா இதில் இயக்குனர் ஆகி இருக்கிறார். இன்னொரு படம் பாரதிராஜா, பின்னணி பாடகர் யேசுதாஸ் மகன் விஜய் யேசுதாஸ் நடித்துள்ள ‘படை வீரன்’. மணிரத்னம் உதவியாளர் தனா இதை இயக்கி இருக்கிறார்.

5-வது படம் ‘விசிறி’. புதுமுகங்கள் ராஜ்சூர்யா, ராம்சரவணா நாயகர்களாக நடித்திருக்கும் இந்த படத்தை வெற்றி மகாலிங்கம் இயக்கி இருக்கிறார்.

2-ந்தேதி மோதும் இந்த 5 படங்களில் எந்த படங்களுக்கு ரசிகர்கள் ஆதரவு இருக்கும் என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும். #ONNPS #Yemali #MaduraVeeran