இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் சுமார் ரூ.400 கோடியில் உருவாகி வரும் `2.0' படத்தின் வியாபாரமும் சூடுபிடித்து நல்ல விலைக்கு விற்பனையாகி வரும் நிலையில், படத்தை உலகம் முழுவதும் அதிக திரையரங்குகளில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
சமீபத்தில் இப்படத்தில் இருந்து மேக்கிங் வீடியோ ஒன்றும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில், 3டி-யில் மேக்கிங் வீடியோ ஒன்று நாளை மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக அக்ஷய் குமார் அவரது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.