சினிமா

அதிக தொகைக்கு விலைபோன ரஜினியின் `2.0' ரிலீஸ் உரிமை

ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் `2.0' படத்தின் விநியோக உரிமை அதிக தொகைக்கு விலைபோயுள்ளதாக கூறப்படுகிறது.

மாலை மலர்

இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் சுமார் ரூ.400 கோடியில் உருவாகி வரும் `2.0' படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தின் ஆந்திர மற்றும் தெலுங்கானா மாநிலத்திற்கான தெலுங்கு விநியோக உரிமையை குளோபல் சினிமா நிறுவனம் கைப்பற்றியிருப்பதாக முன்னதாக பார்த்திருந்தோம். இந்நிலையில், `2.0' படத்தின் ரிலீஸ் உரிமையை குளோபல் சினிமா ரூ.81 கோடிக்கு கைப்பற்றியிருப்பதாக கூறப்படுகிறது. எந்திரன் படத்தின் தெலுங்கு ரிலீஸ் ரூ.27 கோடிக்கு விலை போயிருந்தது.