சினிமா

2.O டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘2.O’ படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. #2Point0 #Rajinikanth

ரஜினிகாந்த், அக்‌‌ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் 2.0 படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் வகையில் சுமார் ரூ.550 கோடியில் இந்த படம் 3டியில் உருவாகி வருகிறது.

இந்த படத்தின் டீசருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருந்த நிலையில், படத்தின் டிரைலர் தீபாவளி விருந்தாக வெளியாக இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலரை நவம்பர் 3-ஆம் தேதி வெளியிட இருப்பதாக இயக்குனர் சங்கர் அறிவித்திருக்கிறார்.

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. #2Point0 #Rajinikanth

SCROLL FOR NEXT